கடற்படையினரின் வாகனத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு
திருகோணமலை வீதியில் தொரட்டியாவை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தோரயாய பகுதியில் கடற்படையினர் பயணித்த வாகனத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது நேற்று(21.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தோரயாய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாகன சாரதி கைது
குருணாகலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த கடற்படை வாகனமே வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான பெண் பொல்கொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.
குருணாகல் வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |