தீராமல் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்
Tamils
Trincomalee
SL Protest
By H. A. Roshan
திருகோணமலை (Trincomalee) முத்து நகர் விவசாயிகள் தொடர்ந்தும் 42 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று (28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மின்சக்தி உற்பத்தி
தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை வெயில் மற்றும் மழை பாராது, அபகரிக்கப்பட்ட தங்களது விவசாயங்களை மீளப் பெற்றுத் தரக்கோரி மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
சூரிய மின்சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு தங்களது விவசாய நிலங்களை வழங்கியதை அடுத்து இந்த தொடர் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்திருந்தனர்.
முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேளனம் மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் இணைந்து இந்த காணி மீட்புக்காக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்