மீண்டும் வெடித்த காசா போர்: தாக்குதல் நடத்த நெதன்யாகு அதிரடி உத்தரவு
காசா (Gaza) மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்துமாரு இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவை அவர் நேற்று (28) பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடை யே போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.
பயங்கரவாதிகள்
இந்தநிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்த விதிகளை மீறியதாக தெரிவித்து நெதன்யாகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் (Palestine) காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது.
உடனடி தாக்குதல்
சமீபத்தில் அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இஸ்ரேல் மற்றும் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.

இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று (28) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தத்தை மீறியதால் பிரதமர் நெதன்யாகு, காசா பகுதியில் உடனடி தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 4 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்