அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி திருமலையில் கையெழுத்து போராட்டம்!
Trincomalee
Sri Lanka
Sri Lanka Government
By Raghav
நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (13.01.2025) திருகோணமலை (Trincomalee) சிவன் கோயிலுக்கு முன்னால் நடைபெற்றுள்ளது.
அரசியல் கைதி
இதன்போது நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், மற்றும் புனர்வாழ்வழிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு பின்னரும் ,நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீளவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்