எங்களை பட்டினி போட வேண்டாம்! தமிழர் தலைநகரில் நடந்த பட்டிப்பொங்கல்
Sri Lankan Tamils
Tamils
Trincomalee
Sri Lanka
By pavan
எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் குறித்த மாட்டுப்பொங்கல் கன்னியா பகுதியிலுள்ள பட்டியொன்றில் கொண்டாடப்பட்டது.
பட்டிப்பொங்கல்
மிருக வதையை தடுப்போம், உங்களுக்கு உணவளிக்கும் எங்களை பாதுகாப்பது மனிதர் உங்களது கடமையாகும், எங்களது உணவை மறுப்பது உரிமை மீறலாகும் என்ற பதாதைகள் எழுதப்பட்ட பதாதையொன்றும் பட்டிக்கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில் திருகோணமலை முன்னாள் நகர சபை உறுப்பினர் இலிங்கராசா மற்றும் திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினர், சிவில் சமூக அமைப்பினர் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்