திருகோணமலை, மொரவெவ - நாமல்வத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கிண்ணியா - குறிஞ்சாங்கேணி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரபீக் முகமது முஸம்மில் (வயது 34) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் திருகோணமலை கடற்படையில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருபவர்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் வயலுக்கு நேற்று (22) மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக வாடியில் மோட்டார் சைக்கிளை வைத்துவிட்டு தாக்கத்தியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
மாலை நேரமாகியும் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு வரததால் வாடியில் இருந்தவர்கள் இரவு 7 மணியளவில் வயல் பகுதிக்கு தேடி சென்றபோது வயல் வரம்பில் குப்பற விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
|