திருகோணமலை துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - மூவர் கைது
திருகோணமலை - கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்றுப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்பட்டிருந்த போது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நஜீம்கான் வசீம் ஸாகுல் ஹமீட் முகம்மது றமீஸ் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வந்த நிலையில், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 30, 43 மற்றும் 54 வயதான 03 சந்தேகநபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
நடுவூற்றுப் பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி - திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு!! இருவர் படுகாயம் (படங்கள்)
