திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு!! இருவர் படுகாயம் (படங்கள்)
gun
Trincomalee
shoot
kinniya
By Thavathevan
திருகோணமலை கிண்ணியா காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் இன்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் நஜீம்கான் வசீம் வயது (30), ஸாகுல் ஹமீட் முகம்மது றமீஸ் வயது(30 )ஆகிய இருவரும் பலத்து காயத்துக்குள்ளாகியுள்னனர். மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி