கன்னியாவில் அசோகர் மகன் மஹிந்த நீராடினாராம்! புதிய கதைகளுடன் இன்று புதிய கட்டுமானம்!
வெள்ளையாக உள்ளவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல தெற்கின் சில பத்தி எழுத்தாளர்கள் கன்னியா வெந்நீர் ஊற்று நடைபெறும் பௌத்த சமய நடவடிக்கைகளால் நல்லிணக்கத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாதென மாய்ந்து.. மாய்ந்து பாய்ந்து பாய்ந்து சொல்லிவைக்கும் பின்னணியில் இன்று அங்கு சில நகர்வுகள் நடந்தன.
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் செய்ய முடியாதென திருகோணமலை நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை பிறப்பித்த நிலையில் இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வு இது ஒன்றும் புதிய கட்டுமானங்களுக்குரிய நகர்வு அல்ல அகழ்வு பணிகளுக்குரிய நகர்வு என அரசாங்கம் சமாளிக்கிறது.
ஆனால் இந்த சமாளிப்பு கண்டு அடடே அப்படியா? என எண்ணத்தோன்றுகிறர். ஒருவேளை இந்த அகழ்வில் ஒரு புத்தர் முளைக்க வைக்பட்டால் அவர் அங்கு குந்த வைக்கப்பட்டால் அது ஒரு புதிய கட்டுமானம் என்பது புரிதல்.
தமிழர்களுடன் தொடர்புடைய இராவணன் சார்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று இடத்தை ஒரு புராத பௌத்த தலமாகவும் அனுராதபுர காலத்தில் அங்கு பௌத்தம் இருந்தமைக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் எல்லாம் இருப்பதான கதைகளும் இலங்கைக்கு பௌத்தத்கொண்டு கொண்டு சென்ற மஹிந்த தேரர் கன்னியா வெந்நீருற்றில் குளித்து நோயிலிருந்து குணமடைந்தார் என்ற திடீர் கதைகளும் வரும் நிலையில் இந்த விடயம் மற்றும் செம்மணி புதைகுழிபகுதியை ஐரோப்பிய ராஜதந்திரிகள் பார்விட்ட விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 13 நிமிடங்கள் முன்