வலுக்கட்டாயமாக செய்வேன்: ஹோர்முஸ் நீரிணை திறப்பு: டரம்பின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்க உதவும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் சிக்கித் தவிக்கும் நாடுகளின் வேண்டுகோளின் பேரில் project freedom (புராஜெக்ட் ஃப்ரீடம்) எனப் பெயரிடப்பட்ட இந்தப் திட்டத்தை தொடங்குவதாக ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி, இன்று காலை முதல் ஹோர்முஸ் நீரிணையில் தடுக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களைப் பாதுகாப்பாக விடுவிக்க அமெரிக்கா தனது சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வலுக்கட்டாயமாக கையாளப்பட வேண்டும்
திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் நடவடிக்கையில் ஏற்படும் எந்தவொரு குறுக்கீடும் 'வலுக்கட்டாயமாகக் கையாளப்பட வேண்டும்' என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல கப்பல்களில் உணவுப் பொருட்கள் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து நீர்வழிப்பாதையின் வழியான போக்குவரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயலாகும் என ஈரான் எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |