ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் புதிய மாகாணம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump
Strait of Hormuz
Iran-US Conflict
By Jaso
ஹோர்முஸ் நீரிணை பகுதியை அமெரிக்காவின் புதிய மாகாணமாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன் அதற்கான வரைபடத்தையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
ஈரான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் , “புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்காவின் உறுதி மொழிகள் மற்றும் ஈரானை கடல்வழியாக தடை செய்வதாக கூறப்படுவதை நீக்குவது உள்ளிட்ட ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது”, என தெரிவித்திருந்தார்.
ஹோர்முஸ் நீரிணை வரைபடம்
காலிபாபின் இக்கருத்து வந்த சிறிது நேரத்திலேயே ஹோர்முஸ் நீரிணைபகுதி அமெரிக்காவின் புதிய மாகாணம் என்று அதிகாரபூர்வமாக ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார். தமது பதிவில் ஹோர்முஸ் நீரிணையை வட்டமிட்டு அடையாளப்படுத்தி காட்டியும் உள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்