சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்...! ட்ரம்பின் அதிரடி தீர்மானம்
சவூதி அரேபியாவில் யுரேனியம் செறிவூட்டும் திறனை வழங்குவதற்கான 30 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சிவில் அணுசக்தித் திட்டத்திற்கு உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வொப்பந்தத்தை அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்கு அனுப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அணு உலைகள்
வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் மூலம் சவூதியில் அணு உலைகள் கட்டப்படவுள்ளதுடன் இருநாடுகளின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு அங்கு யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஈரான் யுரேனியம் செறிவூட்டுவதைத் தடுக்கவே அமெரிக்கா போரில் ஈடுபட்டு வரும் நிலையில் சவூதிக்கு இத்தகைய அனுமதியை வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சர்வதேச அணுசக்தி முகாமையின் தீவிர கண்காணிப்பு விதிகள் இதில் சேர்க்கப்படாததால் சவூதி அணு ஆயுதம் தயாரிக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்கச் சட்டமியற்றுபவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 11 மணி நேரம் முன்