மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! வெடிக்கும் மோதல்
பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் மத்திய கிழக்கு மோதலுக்குள் இழுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதுமாகப் போரிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால் இவ்வாறான நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானின் பாதுகாப்பு
இது குறித்துத் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஈரானால் எண்ணெய் விற்க முடியாத பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டினாலும் எண்ணெய் விற்க முடியாது.
ஈரானின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால் எந்தவொரு உட்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது.
அமெரிக்கப் படைகள்
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு என்பது அமெரிக்கப் படைகள் அங்கு இல்லாத சூழலில்தான் சாத்தியமாகும்.
ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்தைய பழைய நிலைக்கு இனி ஒருபோதும் திரும்பப் போவதில்லை.

வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளில் இந்த உத்திசார் கடல்வழிப் பாதையே ஈரானின் மிகப்பெரிய பலமாகவும் தடுப்பாயுதமாகவும் மாறியுள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இப்போராட்டம் தொடங்குவதற்கு முன்னர், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியே கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்