சீன நாட்டவரிடம் பணம் கொள்ளை : 24 மணிநேர விசாரணை வளையத்துள் முன்னாள் அமைச்சரின் மகன்
சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து ரூ. 20 மில்லியன் கொள்ளையடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுதா ஜனதித் பண்டாரபாயவை, 24 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (22) அனுமதி வழங்கினார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று (21) கொள்ளுபிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் விசாரணை
காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டிய காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கொள்ளையைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபர் அனுதா பண்டார என்பது இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது
24 மணி நேர காவல் உத்தரவு
கொள்ளை நடந்த நேரத்தில் சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதன்படி, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக சந்தேக நபரை காவலில் வைக்க வேண்டும் என புலனாய்வு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, இந்த 24 மணி நேர காவல் உத்தரவை வழங்கினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்