ட்ரம்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி! மத்திய கிழக்கின் உள்கட்டமைப்புகளை நெருங்கும் பேராபத்து
ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள சிவில் உள்கட்டமைப்புகள் குறிப்பாகப் பாலங்கள் மற்றும் ஆற்றல் மையங்கள் மீது கடுமையான பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் பாலங்கள் அல்லது மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கடற்போக்குவரத்து மீது இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு முறையும், ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஹோர்முஸ் நீரிணை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தார் .
ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரானின் அர அதிகாரப்பூர்வ தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அறிக்யொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் “ஹோர்முஸ் நீரிணையின் மீதான இறையாண்மையைச் செலுத்துவதில் ஈரான் இரும்பு போன்ற உறுதியைக் கொண்டுள்ளது.
அந்த நீரிணை மீண்டும் ஈரானுக்கு அச்சுறுத்தலாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரானின் இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஆற்றல் வளங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பிற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்