பக்கிங்ஹாம் அரண்மனையில் மோதலில் ஈடுபட்ட ட்ரம்பின் மெய்க்காப்பாளர்கள்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பாதுகாப்புப் தரப்புக்கும், பிரித்தானிய மன்னர் சார்லஸின் சமையலறை ஊழியர்களுக்கும் இடையே பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசு இரவு உணவுக்கு முன்பு சூடான வாத பிரதிவாதங்களும், வார்த்தை மோதல்களும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு வெளியான செய்திகள் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தனது மௌனத்தை உடைத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற அரசு விருந்தில், மன்னர் சார்லஸ் மற்றும் ட்ரம்ப் இருவரும் பிரித்தானியாவுக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவைப் பாராட்டியிருந்தனர்.
சர்வதேச ஊடக வட்டாரங்கள்
இருப்பினும், சில சர்வதேச ஊடக வட்டாரங்கள், ஜனாதிபதிக்காகத் தயாரிக்கப்பட்ட உணவை அவரது இரகசிய சேவை முகவர்கள் திரைக்குப் பின்னால் ஆய்வு செய்து சுவைக்க முயன்றபோது சமையல்காரர்கள் வருத்தமடைந்ததாகவும், இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தன.
இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை இந்த செய்திகளை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில் "இந்தக் கதையும் அதில் உள்ள குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானவை," என அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், சமையல்காரர்கள் கவனமாக உணவுகளைத் தயாரித்துக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அவர்களை ஆய்வு செய்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக ஒரு வட்டாரம் பிரித்தானிய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க இரகசிய சேவை
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க இரகசிய சேவையிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பதற்றம் தணிய பல நிமிடங்கள் ஆனது என்றும், மேலும் பிரதான மண்டபத்தில் இருந்த எந்த உயரதிகாரிகளும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருந்தினர்களுக்கு நிகழ்வில் உயர்தர உணவு வழங்கப்பட்டது.
இதில் ஹாம்ப்ஷயர் டக் ஃபில்லட், ஆர்கானிக் நோர்போக் சிக்கன் பால், கென்ட் ராஸ்பெர்ரி சோரல் மற்றும் விக்டோரியா பிளம்ஸின் இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூடுதலாக, வின்ஸ்டன் சர்ச்சிலின் விருப்பமான ஷாம்பெயின் 'பால் ரோஜர்' உட்பட பல உயர் மதிப்புள்ள வைன் வகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
