ஹமாஸின் ஆயுதங்களை அப்புறப்படுத்த ட்ரம்ப் எடுக்கும் அதிரடி முயற்சி
ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுருத்தியுள்ளார்.
குறித்த விடயத்தை தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவின் முயற்சியால் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
அமைதி வாரியம்
இந்தநிலையில், ஹமாஸ் அமைப்பு தனது வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும் பிணைக் கைதிகளின் உடல்களை உடனடியாகத் திரும்பத் தர வேண்டும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவர்கள் இதை மரியாதையான முறையில் செய்யலாம் என தெரிவித்த அவர் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் ஹமாஸின் சுரங்கப்பாதைகளைத் தகர்க்கவும் கனரக ஆயுதங்களை அப்புறப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன், காசாவின் சிவில் நிர்வாகத்தைக் கவனிக்க அமைதி வாரியம் (Board of Peace) ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட இந்தக் குழுவிற்கு அந்நாட்டின் முன்னாள் துணை அமைச்சர் அலி ஷாத் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |