எப்பொழுதும் அமெரிக்கர்களின் சம்பியன் ட்ரம்ப்
Donald Trump
People
United States of America
By Vasanth
டொனால்ட் டிரம்ப் எப்பொழுதும் அமெரிக்கர்களின் சம்பியனாக இருப்பார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20ம் திகதி பதவி ஏற்பதற்கு முன் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, புளோரிடாவில் உள்ள பாம் பீச்சில் உள்ள அவருடைய கோல்ப் கிளப்பிற்கு சென்றார்.
டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதிக்கான அலுவலகத்தை புளோரிடாவில் திறந்துள்ளார்.
இந்த நிலையில் அலுவலகம் சார்பில் வெளியான அறிக்கையில்,டொனால்ட் டிரம்ப் எப்பொழுதும் அமெரிக்கர்களின் சம்பியன் எனத் தெரிவித்துள்ளது.
டிரம்பின் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், இந்த அலுவலகம் டிரம்ப் தொடர்பான அறிக்கைகள் போன்ற முக்கிய செயல்பாட்டை கவனிக்கும் எனக் கூறப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி