ட்ரம்பின் புதிய வரி விதிப்பு: வெளியான அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் (United States) இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர கனரக லாரிகளுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சமூக ஊடகத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், நவம்பர் முதலாம் திகதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடை
உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடையே நடைபெறும் போர்களைத் தடுக்கும் நோக்கில் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது அதிக வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ரஷ்யாவின் (Russia) முக்கிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா (India), ரஷ்யா மற்றும் உக்ரைன் (Ukraine) இடையேயான போரில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்தார்.
அத்துடன், எஃகு மற்றும் அலுமினியம் முதல் சில மின்னணு பொருள்கள் வரை பல பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரை அதிக வரிகளை விதித்தார்.
தேசிய பாதுகாப்பு
இந்தநிலையில் தற்போது நவம்பர் முதலாம் திகதி முதல் பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையினால், அமெரிக்காவில் அதிகளவில் கனரக லாரிகளை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளை இந்த நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கனரக லாரிகள் இறக்குமதிக்கான வரிகள் நடைமுறைக்கு வரும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
