கிரீன்லாந்தை கைப்பற்றத் துடிக்கும் ட்ரம்ப் - படை அனுப்ப தயாராகும் கனடா
நேட்டோ இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க கிரீன்லாந்திற்கு சிறிய துருப்புக்களை அனுப்ப கனடா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கான திட்டங்களை அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளதாகவும், பிரதமர் மார்க் கார்னியின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 கூட்டணி நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
வரிகள் தொடரும்
எந்தவொரு மிரட்டலுக்கும் நாங்கள் பணிய மாட்டோம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு பிப்ரவரி 1 முதல் 10% சுங்கவரி விதிக்கப்படும் என்றும், பின்னர் அது 25% வரை உயர்த்தப்படலாம் என்றும் டிரம்ப் அறிவித்ததையடுத்து ஐரோப்பிய தலைவர்களின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ட்ரம்ப் அச்சுறுத்தல்
கிரீன்லாந்தை கைப்பற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள் கடந்த வாரம் கிரீன்லாந்திற்கு சிறிய எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களை அனுப்பியிருந்தனர்.

இந்த ஆண்டு இறுதியில் துருப்புக்கள் பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |