மத்திய கிழக்கில் மாறும் களம்! ஈரான் போரால் ஆட்டம் காணும் ட்ரம்ப்..
கடந்த ஒரு வாரமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரத்தை கடலோர அலையில் தரித்து நிற்கும் படகு போன்ற நிலையற்ற சூழலுக்குள் தள்ளியுள்ளன.
குறிப்பாக, அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு யுத்தத் திட்டமும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றில் நாம் பார்த்துள்ளோம்.
ஒரு யுத்தத்தின் உளவியல் தாக்கத்தில் தொடங்கி, ஏற்பட்ட இழப்புகளை மறைத்து, அமெரிக்கப் படைகள் வெற்றி பெற்றுவிட்டதாக ஒரு மாயையை உருவாக்கும் காய் நகர்த்தலில் அமெரிக்க ஊடகங்களும் அதனுடன் இணைந்து கைகோர்ப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
ஆனால், இன்றோ ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில், ஈரானிய ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்களே ட்ரம்பின் நிலையை மேலும் கீழ்நோக்கித் தள்ளியுள்ளன எனலாம்.
வழமைக்கு மாறாக, ட்ரம்புக்கு எதிரான உளவியல் யுத்தத்தை முன்னெடுத்து வரும் அமெரிக்க ஊடகங்களின் திட்டங்கள் என்ன? அத்துடன், ஈரானை மையப்படுத்தி ட்ரம்ப் அடுத்து என்ன செய்யப் போகிறார்? மத்திய கிழக்கின் தற்போதைய அரசியல் சூழல் எந்தத் திசையில் நகர்கிறது? இந்தக் கேள்விகளுக்கான எதிர்வுகூறல்களையும், தற்போதைய நிலைமையின் பின்னணியையும் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |