ஈரான் மீது கடுமையான பொருளாதார - இராணுவத் தாக்குதல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்காத் தனது இராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இம்மோதலில் தலையிடாமல் நடுநிலை வகிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த போதே ட்ரம்ப் இக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உங்களுக்குத் தெரிந்தபடி நாங்கள் ஈரானைப் பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் மிகவும் கடுமையாகத் தாக்கி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் நிதி ஆதாரங்கள் மீதான தடைகளை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தநிலையில் ஈரான் மோதலில் ரஷ்யா தலையிடாமல் ஒதுங்கியிருப்பதைப் பாராட்டியுள்ள ட்ரம்ப், புடினின் இந்த அணுகுமுறை மிகவும் சிறப்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா ஈரானில் எங்களுக்கு எதிரான எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை என்பதை எங்களால் பார்க்க முடிகிறது எனவும் இது மிகவும் சாதகமான ஒரு விஷயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |