கனடா பிரதமரை மீண்டும் வம்புக்கிழுத்த டொனால்ட் டரம்ப் : முற்றுகிறது முறுகல்
அமெரிக்கப் (us)பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா(canada) அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பொருட்களுக்கு மேலும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (donald trump)எச்சரித்துள்ளார்.
ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்த கனடா பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்கப்படும் என கனடா அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பொருட்களுக்கு மேலும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பொங்கியெழுந்த ட்ரம்ப்
இது குறித்து, ட்ரம்ப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா ஆளுநர் ட்ரூடோவிடம், அவர் அமெரிக்கா மீது பழிவாங்கும் வரியை விதிக்கும்போது, நமது பரஸ்பர வரி உடனடியாக அதே அளவு அதிகரிக்கும் என்பதை விளக்குங்கள்.என கூறியுள்ளார்.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி கூறிய போது, கனடா பிரதமர் ட்ரூடோ கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது முதல் கனடா ஆளுநர்என ட்ரம்ப் குறிப்பிட்டு பதிவுகளை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
