கிரீன்லாந்தை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா: அணிதிரண்ட ஐரோப்பியத் தலைவர்கள்
டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை ட்ரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா உடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்து வருகின்றார்.
அதற்கு டென்மார்க் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
அமெரிக்க இராணுவம்
கடந்த மூன்றாம் திகதி வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா இராணுவம் பிடித்துச் சென்றது.
இதனையடுத்து ட்ரம்ப்பின் அடுத்த குறி கிரீன்லாந்தாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து தெரிவித்த ட்ரம்ப், “பாதுகாப்பு ரீதியாக கிரீன்லாந்து இப்போது மிக முக்கியப் புள்ளியாக இருக்கின்றது.
கிரீன்லாந்து முழுவதும் ரஷ்யா மற்றும் சீன கப்பல்கள் உள்ளன.
அதனால் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தப் பகுதியை அமெரிக்கா உடன் இணைப்பது அவசியம்” என தெரிவித்தார்.
இதனையடுத்து ஐரோப்பிய தலைவர்களான பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், ஜேர்மனி ஜனாதிபதி மெர்ஸ், இத்தாலி பிரதமர் மெலோனி, போலந்து பிரதமர் டஸ்க், ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் ஸ்டார் கெயிர்மர் உள்ளிட்டோர் டென்மார்க்கிற்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.
கிரீன்லாந்தின் உரிமை
குறித்த அறிக்கையில், “கிரீன்லாந்து உள்ளிட்ட டென்மார்க் பிராந்தியம் நேட்டோ அமைப்பின் ஒரு அங்கம் மற்றும் கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான விஷயங்களில் முடிவு செய்வது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் உரிமை, அவர்கள் மட்டுமே அதனை செய்ய முடியும்” என தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “முக்கியமான வெளியுறவு கொள்கை இலக்கை அடைய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல்வேறு வாய்ப்புகளை ஆலோசித்து வருகின்றனர்.
அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்துவது என்பது ஜனாதிபதி வசம் உள்ள விருப்பமாகும்.
கிரீன்லாந்தை கையகபடுத்துவது தேசிய பாதுகாப்பு முன்னுரிமை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 17 மணி நேரம் முன்