கடுமையாக வீழ்ச்சியடையப்போகும் கச்சா எண்ணெய் விலை : ட்ரம்ப் எதிர்வு கூறல்
''ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடையும்'' என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஈரானுடனான போரில் நாம் வெற்றி பெறும்போது, மற்ற அனைத்தும் வீழ்ச்சியடைவதைப் போலவே, குறிப்பாக அதை விடவும் அதிகமாக கச்சா எண்ணெய் விலைகளும் கடுமையாக வீழ்ச்சியடையும்.
அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும்
ஒரு கலன் (3.785 லிட்டர்) மூன்று டொலராக இருக்கும். ஆனால் இறுதியில், இரண்டு டொலருக்கும் கீழே சென்றுவிடும்; இவை அனைத்தும் நிச்சயமாக விரைவாக நடக்கும். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்காது. அவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை சுற்றி தாக்குதல்கள்
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் முக்கிய உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை சுற்றி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த தாக்குதல்களை அடுத்து கச்சா எண்ணெய் விலைகள் உச்சத்தை எட்டின . பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டொலராக உயர்ந்தன. இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் அதிகம் ஆகும். இந்த சூழலில் விலைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |