25% வரி...! டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வௌயிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தென்கொரியா தெரிவித்துள்ளது.
முறையாக பின்பற்றவில்லை
ட்ரம்ப் பதிவில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை தென்கொரியா முறையாகப் பின்பற்றவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வாகனங்கள், மரம் , மருந்துகள் மற்றும் ஏனைய அனைத்து 'பரஸ்பர வர்த்தகப் பொருட்களுக்கும்' விதிக்கப்பட்டிருந்த 15 சதவீத வரியானது, இனி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையின்படி அமெரிக்கா தனது வரிகளை விரைவாகக் குறைத்துள்ள போதிலும், தென்கொரிய நாடாளுமன்றம் அந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதில் மந்தகதியில் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |