சீனா மீதான வரி குறைப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
சீனா மீதான வரி விதிப்பு 57 சதவீதத்தில் இருந்து 47 சவீதமாக குறைக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பயைடுத்து டொனால்ட் டர்ம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உறவு
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி, “வலுவான சீனா மற்றும் அமெரிக்க உறவுகளை உறுதி செய்ய வேண்டும்.

பல ஆண்டுகளாக, சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் பலமுறை பொதுவில் கூறியுள்ளேன்.
நல்ல சூழ்நிலை
டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன் சீனா மற்றும் அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்தமாக நிலையானதாகவே உள்ளன.

அவ்வப்போது உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது இயல்பானது.
இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |