டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியானதும் எலான் மஸ்க்கிற்கு கிடைக்கவுள்ள பதவி
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை (Elon Musk) தலைவராக நியமிப்பேன் என்று டொனல்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் (New York) உள்ள எக்கனாமிக் கிளப்பில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இவருக்கு பிரபல தொழிலதிபரான எலான்மஸ்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் இந்நிலையில், அமரிக்கா மாகாணங்களில் நடைபெறும் பிரசாரங்களில் டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசி வருகின்றார்.
எலான் மஸ்க்கிற்கான பதவி
மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதும் புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும்.
2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.
எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க எலான் மஸ்க்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |