வெற்றிக் கொண்டாட்டத்தில் FIFA தலைவரால் விலக்கி வைக்கப்பட்ட ட்ரம்ப்
202 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்த காட்சி சமூக ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரிக்கு கோப்பை வழங்கப்பட்ட பின்னரும், ட்ரம்ப் மேடையில் தொடர்ந்து நின்றிருந்தமை தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்சிகளில் பதிவாகியுள்ளது.
அதன்பின், ஸ்பெயின் வீரர்கள் உலகக் கோப்பையை ஏந்தி வெற்றியைக் கொண்டாடிய வேளையிலும் ட்ரம்ப் மேடையை விட்டு உடனடியாக விலகவில்லை என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் நடத்தை
மேலும் அந்தக் காட்சிகளில், ரோட்ரி ட்ரம்புக்கு சற்றுப் பின்வாங்குமாறு சைகை செய்வது போன்ற தருணமும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
President Donald J. Trump presents the World Cup Trophy to Spain, the 2026 @FIFAWorldCup Champions! 🏆 pic.twitter.com/SHsoBhYm1b
— The White House (@WhiteHouse) July 19, 2026
இதற்கிடையில், FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோ ட்ரம்பிடம் சென்று, அவரை மேடையிலிருந்து அழைத்துச் செல்ல முயற்சிப்பது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.
குறித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில் ட்ரம்பின் நடத்தை குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் மாறுபட்ட விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்