மதுரோவைத் தொடர்ந்து ட்ரம்பின் அடுத்த இலக்கு...! பதட்டத்தில் உலக நாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது புதிய வெளியுறவுக் கொள்கையான டொன்ரோ கோட்பாடு என்பதன் கீழ் பல நாடுகளைத் தனது அடுத்த இலக்குகளாக அடையாளப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், கிரீன்லாந்து தீவு முழுவதையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கப்பல்களின் நடமாட்டம்
அங்கு ரஷ்யா மற்றும் சீனக் கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இராணுவத் தளவாடங்களுக்குத் தேவையான அரிய மண் தாதுக்கள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரும் ஆண்டுகளில் துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால் புதிய கப்பல் பாதைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ் பிரெட்ரிக் நீல்சன், தீவின் மீதான அமெரிக்க கட்டுப்பாட்டின் கருத்தை ஒரு கற்பனை என விவரித்து ட்ரம்பிற்கு பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |