சொர்க்கக் கோவிலில் ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தை! ட்ரம்பின் சிறப்பு கருத்து
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் சொர்க்கக் கோவிலில் வைத்து இரு தரப்பு விடயங்கள் குறித்து விவரித்துள்ளார்.
ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்தன என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவை சிறப்பானவை என்றும் கூறியுள்ளார்.
இதன்போது தாய்வான் குறித்து விவாதித்தார்களா என்பது பற்றிய தொடர் கேள்விகளுக்கு ட்ரம்ப் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உலக பாரம்பரிய தளம்
600 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான, பெய்ஜிங்கில் உள்ள சொர்க்கக் கோயிலுக்கு டிரம்ப்பும் ஷி ஜின்பிங்கும் சென்றுள்ளனர்.

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, இந்தக் கோயில் முதலில் மிங் வம்சத்தின் இறுதிக் காலத்தில், 1420-ல் கட்டப்பட்டது. இது அரச பலிகளுக்காகவும், நல்ல விளைச்சலுக்காகப் பிரார்த்தனை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்துக்கு முன்னதாக ஷி ஜின்பிங்குடன் நடத்தும் பல சந்திப்புகளின்போது, ஈரானில் போர் தொடங்கியபோது இருந்ததை விட, தனது சீன சகாவுக்கு எதிரேதான் அமெரிக்க அமர்ந்திருப்பார் என்று சுயாதீன சீன ஆய்வாளர்கள் விமர்சன கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
ஈரானில் நிலைமை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் போருக்கு முன்பு இருந்ததை விட ஒப்பீட்டளவில் பலவீனமான நிலையில் ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் உள்நாட்டில் அழுத்தத்தை மேலும் கூட்டுகின்றன என்றும் இதற்கிடையில், ஷி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |