ட்ரம்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்புமில்லை : மொஜ்தபா கமேனி பகிரங்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஜ்தபா கமேனி நேற்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை டொனால்ட் டரம்ப் மீண்டும் மீண்டும் மீறி வருவதாக மொஜ்தபா கமேனி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்நிறுத்த உடன்படிக்கை
அத்துடன் ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளிடமிருந்து அமெரிக்கா மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக்கொள்ளும் என்று ஈரானின் உச்ச தலைவர் எச்சரித்துள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கை முறிந்ததை அடுத்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிலையில் பாலங்கள், தொடருந்து பாதைகள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, அமெரிக்கா இந்த வாரம் ஈரான் மீதான தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் குவைத்தில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 24 நிமிடங்கள் முன்