புடினுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை
கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புடினை டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் மூன்று வருடங்கள் நிறைவடைந்து நான்காவது வருடமாக நடைபெற்று வருகின்றது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.
பேச்சுவார்த்தை
ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, தற்போது உக்ரைனுடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பயங்கர வான்தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்த தாக்குலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
70 இற்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ள நிலையில், சமீபத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான நேரம்
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது.
இந்தநிலையில், கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புடினை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது, கீவ் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது, இது தேவையில்லாதது.
மேலும் மிகவும் மோசமான நேரம், புடின் நிறுத்துங்கள், வாரத்திற்கு ஐந்தாயிரம் வீரர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
