புரிந்துணர்வின் விளிம்பு வரை முன்னேறிய ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையை சீர்குலைத்த ட்ரம்ப்
பேச்சுவார்த்தைகள் ஒரு சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளிம்பு வரை முன்னேறியிருந்த தருணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட பதிவு நல்லென்ன அடிப்படை அற்றது என ஈரான் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளின் பின் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து திரும்பிய பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர்,
தீவிரமான ஈடுபாடு
இந்தப் பேச்சுவார்த்தைகள், கடந்த 47 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மிகவும் தீவிரமான ஈடுபாடு.

தொடரும் பகைமைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஈரான் இதில் நன்னம்பிக்கையுடன் பங்கேற்றது.
பேச்சுவார்த்தைகள் ஒரு சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளிம்பு வரை முன்னேறியிருந்தன.
ஆனால், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருந்தபோது, “நாங்கள் அதீத நிலைப்பாடு, மாறிக்கொண்டே இருக்கும் இலக்குகள் மற்றும் முற்றுகையை எதிர்கொண்டோம்," என்ற ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மறிப்பதாக விடுத்த சமீபத்திய அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்களுக்கு எந்தப் பாடமும் கற்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால் நல்லெண்ணம் நல்லெண்ணத்தையே உருவாக்கும். பகைமை பகைமையையே உருவாக்கும்," என்று அராக்சி மேலும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |