அமெரிக்காவின் 20 எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி! புலம்பித் திரியும் ட்ரம்ப்
அமெரிக்காவுக்கு நல்லெண்ண அடிப்படையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதன்போது, தாங்கள் ஈரானுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் திங்கட்கிழமை ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 எண்ணெய் கப்பல்களை அமெரிக்காவிற்கு அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Image Credit: NPR
எனினும், அதனை துல்லியமாக வரையறுக்க முடியாது என்றும் மரியாதையின் அடையாளமாக, அவர்கள் எங்களுக்கு 20 எண்ணெய் கப்பல்களைக் கொடுத்தார்கள் என்று தான் நினைப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரானுடன் ஒப்பந்தம்
அதன்படி, மிகப் பெரிய எண்ணெய் கப்பல்கள் நாளை காலை முதல் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் அது நடக்காமலும் போகலாம் என்றும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த கருத்துகள் தொடர்பில் ஈரான் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எதுவித பதில்களோ அறிக்கைகளோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 13 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்