பராசீக வளைகுடா சுறாக்களுக்கு இரையாகும் அமெரிக்க இராணுவம்! ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
பாரசீக வளைகுடாவில் எந்தவொரு தரைவழித் தாக்குதல்கள் மற்றும் சில தீவுகளை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரானிய இராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்தது.
அவ்வாறு அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவர்கள் “பாரசீக வளைகுடாவின் சுறாக்களுக்கு நல்ல உணவாகிவிடுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளரும் பிரிகேடியர் ஜெனரலுமான இப்ராஹிம் ஸோல்ஃபகாரி, ஒரு காணொளி அறிக்கை மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நெதன்யாகுவின் கைப்பாவை
எப்ஸ்டீன் வழக்கோடு ட்ரம்புக்கு உள்ள தொடர்புகள் காரணமாக, இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாடிடம் இருந்து அவர் அழுத்தத்தில் இருப்பதாகவும், மேலும் அவர் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'கைப்பாவை' என்றும் ஸோல்ஃபகாரி விமர்சித்துள்ளார்.

“எப்ஸ்டீன் வழக்கில் அவருக்குள்ள பின்னணி காரணமாக, அமெரிக்க ஜனாதிபத டொனால்ட் ட்ரம்ப் மொசாட் என்ற பயங்கரவாத அமைப்பின் அழுத்தத்தில் இருக்கிறார் என்பதிலும், ஈரானுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பில் அவர் இஸ்ரேலியப் பிரதமரின் பகடைக்காயாக மாறியுள்ளார் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஏதேனும் தரைவழித் தாக்குதலோ அல்லது ஆக்கிரமிப்பு முயற்சியோ தொடங்கப்பட்டால், அமெரிக்கப் படைகளை முற்றிலுமாக அழிப்பதற்காக ஈரான் இராணுவம் தருணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறது என்று ஸோல்ஃபகாரி எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 12 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்