100 நாட்களை கடந்த ஈரான் போர்! நிலைப்பாட்டை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கி கிட்டத்தட்ட 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஈரான் போரை தான் "மிக வேகமாக நகர்த்திச் செல்வதாக" ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்குவதற்கு முன்பு, இது நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவை விட தற்போது கூடுதல் காலம் ஆகியுள்ள நிலையிலும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது"நான் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறேன். நான் இப்போதுதான் மூன்றாவது மாதத்தில் இருக்கிறேன். வியட்நாம் போர் 19 ஆண்டுகள் நீடித்தது, ஆனால் நான் எனது மூன்றாவது மாதத்தில்தான் இருக்கிறேன்" என்று ட்ரம்ப் ஒப்பிட்டுக் பேசியுள்ளார்.
அமைதி உடன்பாடு
ஈரானுடன் இன்னும் தற்காலிக உடன்பாட்டைக்கூட எட்ட முடியாத சூழல் நிலவும் வேளையில், வெள்ளிக்கிழமையன்று ஈரான் தரப்பிலிருந்து ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ட்ரோன்கள் ஏவப்பட்டன.இது, ஈரான் உண்மையிலேயே அமைதி உடன்பாட்டை விரும்புகிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்துப் பேசிய ட்ரம்ப், "இது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு விடயம். அவர்கள் நீண்டகாலமாகப் பெரும் சுதந்திரத்தை அனுபவித்து வந்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பலவீனமான, திறமையற்ற தலைமைகளையே அவர்கள் இதுவரை கையாண்டு வந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |