அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம்! ஈரானின் முக்கிய புள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள ரெசாய், "பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையை எட்டியுள்ளன; டொனால்ட் ட்ரம்ப் தான் இந்த முட்டுக்கட்டையை உடைக்க வேண்டும். பந்து இப்போது ட்ரம்ப்பின் பக்கமே உள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய மோதல்கள் மீண்டும் தொடங்குமானால், இந்த போர் இந்தியப் பெருங்கடல், செங்கடல், பாப் அல்-மந்தேப் நீரிணை மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி வரை விரிவடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் எரிபொருள் விநியோகம்
இதுவரை, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர், செங்கடலுக்குள் செல்லும் முக்கிய வழித்தடமான பாப் அல்-மந்தேப் நீரிணையில் கப்பல் போக்குவரத்தின் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

இந்த பாப் அல்-மந்தேப் மற்றும் ஹோர்முஸ் ஆகிய இரு முக்கிய நீரிணைகளும் மூடப்பட்டால், அது உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் கால் பகுதியை (25%) துண்டித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |