பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200 வீத வரி: மக்ரோனை மிரட்டும் ட்ரம்ப்
காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பின்னரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், போருக்குப்பின் காஸாவை நிர்வகிக்க ‘காஸா அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையைப் பொருட்டாக மதிக்காத பிரான்ஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

டென்மார்க்கின் ஒரு பகுதியான ஆர்க்டிக் பிரதேசத்தில் ட்ரம்ப் ஏன் உறுதியாக இருக்கிறார் என்பதற்கான அமெரிக்க திறைசேரிசெயலாளர் ஸ்கொட் பெசென்ட் கூறிய கருத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கேலி செய்ததைத் தொடர்ந்து இந்த கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.
பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி
இதுகுறித்து ட்ரம்ப் பேசுகையில், “பிரான்ஸின் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப் போகிறேன். அப்போது அவர் காஸா அமைதி வாரியத்தில் இணைவார். ஆனால், அவர் சேரவேண்டியது இல்லை” என மக்ரோனை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் டாவோஸில் நடைபெறும் ஜி7 தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன், டேன்ஸ், சிரியா, ரஷ்யா தலைவர்களையும் அழைத்துப் பேச முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |