ஈரானுடனான போர்நிறுத்தம் நீட்டிப்பு: ட்ரம்ப் வழங்கிய குறுகிய கால அவகாசம்
ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியின் வேண்டுகோளை ஏற்று இந்த அவகாசம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானியத் துறைமுகங்கள்
ஈரானியத் துறைமுகங்களை முடக்கி அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெப்போதையும் விடத் தீவிரமாக இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்திற்குள் தற்போது நிலவும் அரசியல் பிளவுகள் மற்றும் குழப்பங்கள் காரணமாகவே அவர்களால் ஒரு தெளிவான அமைதித் திட்டத்தை முன்வைக்க முடியவில்லை என ட்ரம்ப் சாடியுள்ளார்.

ஈரானியத் தலைமை ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவைக் கொண்டு வரும் வரை மட்டுமே இந்த அவகாசம் நீடிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுவரை எமது கடற்படை முற்றுகை நீடிக்கும் என்பதோடு அமெரிக்க இராணுவம் எந்நேரமும் தாக்குதலுக்குத் தயாரான நிலையிலேயே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |