காசாவில் சிறை வைக்கபட்டுள்ள பணயக்கைதிகள்: ட்ரம்பின் அதிரடி தீர்மானம்..!
காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படாவிட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,“ஹமாஸ் அமைப்பினால் காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை(15) மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்.
அதேநேரம் காசாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும். ”என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)