அமெரிக்காவுடன் ஈரான் சமாதானத்துக்கு தயாராகிறது! ட்ரம்ப் விளக்கம்
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் தொடரும் மோதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீர்வு காணப்படாமல் நீடித்து வரும் நிலையில், ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஈரான் ஆர்வம் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
விரைவில் ஒரு உடன்பாடு
“விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படுமா என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஈரான் தரப்பு அவ்வாறு செய்யாவிட்டால், மிகவும் மோசமான நிலையை எதிர்கொள்வார்கள். ஒரு உடன்பாட்டை எட்டுவதில் அவர்களுக்கு ஆர்வம் உள்ளது” என கூறியுள்ளார்.
இந்த இருதரப்பு மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதையும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கையாள்வதையும் நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை பலனளிக்காத நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து ட்ரம்ப் விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், ஈரான் ராஜதந்திரத்திற்கும் அமைதியான தீர்வுகளுக்கும் தொடர்ந்து உறுதியுடன் உள்ளது.
பிராந்திய பதற்றம்
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து பிராந்திய பதற்றம் அதிகமாகவே இருந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியதுடன், ஹோர்முஸ் நீரிணையையும் மூடியுள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் ஏப்ரல் 8 அன்று போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நீடித்த உடன்படிக்கையை ஏற்படுத்தத் தவறிவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |