ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல்கள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
"நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன். அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்க வைக்க விரும்பினர்,""அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும்." என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
விமானம் மாற்றப்பட்ட தகவல்
ஜூலை 8 அன்று, தொலைக்காட்சி கமராக்களைப் பார்த்தபடி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறியதாகவும், பின்னர் ஒரு இராணுவ விமானத்தில் ஏறுவதற்காக உணவு வண்டியில் ஒளிந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தின் மீது ஏவுகணை வீசப்போவதாக ஈரான் விடுத்த நம்பகமான அச்சுறுத்தலை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
ஈரானிய அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் ஒரு விரிவான தந்திரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக வெளியேற்றப்பட்டார் என்பது, விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் தெரியாமல் இருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |