ஈரானில் தலைவரே இல்லை....! ட்ரம்ப் கிளப்பிய புதிய சர்ச்சை
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே அந்த நாட்டை யார் தான் நடத்துகிறார்கள் என்று எவருக்குமே தெரியாத நிலை தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக உலக தலைவர்கள் பலரும் தன்னை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானின் தற்போதைய அரசியல் மற்றும் இராணுவ தலைமைத்துவத்தில் நிலவும் தெளிவற்ற தன்மையையும் குழப்பத்தையும் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அந்நாட்டுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக தலைவர்கள்
உலக தலைவர்கள் தமக்கு நன்றி தெரிவிப்பது குறித்துக் குறிப்பிட்ட அவர், ”உலக தலைவர்கள் பலர் என்னை அழைத்து ஈரான் விவகாரத்திற்காக நன்றி கூறுகிறார்கள்.
அதற்கு நான், நல்லது ஆனால் இதற்கான செலவை எப்போது நீங்கள் செலுத்தப்போகிறீர்கள் என்று கேட்கிறேன்” என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), மேரிலாந்தில் (Maryland) இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரிய அமெரிக்க கப்பல் கட்டும் தளத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சுமார் 3.7 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் உருவாகவுள்ள இந்த புதிய பாதுகாப்பு கப்பல் கட்டும் தளத்தில், அமெரிக்க அரசாங்கம் 40 சதவீத பங்குகளை கொண்டிருக்கும் என ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |