ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது கடுமையான தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தெஹ்ரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா, ஈரான் மீது "கடுமையாக" தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
ஃபாக்ஸ் நியூஸுடனான ஒரு தொலைபேசி உரையாடலில், ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுக்கள் மீது இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் ஈராக் அரசாங்கத்துடன் "ஒருங்கிணைந்தவை" என்று ட்டிரம்ப் கூறினார்.
"அவர்கள் அடி வாங்கப் போகிறார்கள்"
ஜோர்டான் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து, "நாங்கள் அவர்களை (ஈரானியர்களை) கடுமையாகத் தாக்குவோம்," என்றும், "அவர்கள் அடி வாங்கப் போகிறார்கள்" என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து, ட்ரம்ப், "அவர்கள் தொடர்ந்து பேச நாங்கள் அனுமதிப்போம்," என்று கூறினார்.
இந்த வாரத் தொடக்கத்தில், அமெரிக்கா ஈரானுடன் "நல்ல பேச்சுவார்த்தைகளை" நடத்தி வருவதாகவும், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார், ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் இராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் எச்சரித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |