ஈரானுடன் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப்
ஈரானுடனான போர், இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்து விட்டதாக (militarily effectively over) தான் நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம்
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நகர்வுகள் சாதகமாகி வருவதாகவும், இந்தப் போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரின் பிரதமருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ மோதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டாம் என கட்டார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |