12 நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து வரப்போகும் கடிதம்
12 நாடுகளுக்கு புதிய வரியை விதித்து எழுதப்பட்ட கடிதங்களில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) கையெழுத்திட்டார். இந்த வரி விதிப்பை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற உடன், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை பலமடங்கு உயர்த்தினார். இதற்கு கடும் அதிருப்தி நிலவியதால், 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரி உயர்வை நிறுத்திவைத்த அவர், இந்த காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
12 நாடுகளுக்கான வரி விதிப்பு கடிதங்களில் கைச்சாத்திட்ட ட்ரம்ப்
இதையடுத்து, பிரிட்டன் உடனான ஒப்பந்தம் மட்டுமே இறுதி செய்யப்பட்ட நிலையில், ஏனைய நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தக் காலக்கெடு ஜூலை 9ல் முடிவடைய உள்ளதால், பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், நியூ ஜெர்சி மாகாணத்திற்கு புறப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 12 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான கடிதங்களில் கையெழுத்திட்டு விட்டதாக கூறியுள்ளார்.
ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிட்டு விடுங்கள்
மேலும், அவர் கூறுகையில், '12 நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை வெளியிடப்படும். அன்றைய தினம் அந்தந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு விடும். இதை ஏற்றுக் கொள்வது என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் கைவிட்டு விடுங்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு 70 சதவீதம் வரையில் வரிவிதிப்பு இருக்கும். ஓகஸ்ட்1 முதல் இந்த புதிய வரி நடைமுறைக்கு வரும்,' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
