அவதூறுக்கு பத்து பில்லியன் டொலர் கோரி ட்ரம்ப் வழக்கு தாக்கல் !
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை மற்றும் ரூபர்ட் முர்டோக் உள்ளிட்ட அதன் உரிமையாளர்கள் மீதும் பத்து பில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலியல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட, நிதியாளர்- ஜெஃப்ரி எப்ஸ்டீனின் 2003 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் ட்ரம்ப்பின் பெயர், பாலியல் ரீதியாகத் தூண்டும் ஓவியம் மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் இருந்ததாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், இது போலியான செய்தி என்று தெரிவித்து ட்ரம்ப் தமது வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
வழக்குத் தாக்கல்
மியாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரொபர்ட் தோம்சன் மற்றும் இரண்டு செய்தியாளர்கள் உட்பட்ட பலர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் தம்மை அவதூறு செய்ததாகவும், தமக்கு மிகப்பெரிய நிதி மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார் முன்னதாக எப்ஸ்டீன், சிறுமிகளை பாலியல் ரீதியாக தகாதமுறைக்கு உட்படுத்தியதில் அவரது பங்கு தொடர்பான ஐந்து கூட்டாட்சி குற்றச்சாட்டுகளில் 2021 இல் தண்டிக்கப்பட்டார்.
இந்த நிலையில்,எப்ஸ்டீன் 2019 இல் நியூயோ ர்க் சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
