எரிபொருள் நெருக்கடி : நட்பு நாடுகளை கைவிட்டார் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட இடையூறுகளால் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், தங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம், நட்பு நாடுகளுக்கு உதவ அமெரிக்கா தலையிடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நட்பு நாடுகளுக்கு இரண்டு தெரிவுகள்
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகள் அமெரிக்காவிடமிருந்து அதனை வாங்குவதையோ அல்லது விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்ள மாற்று வழிகளைக் கண்டறிவதையோ பரிசீலிக்க வேண்டும் என்று ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

"அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு சென்று அதை எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று கூறிய ட்ரம்ப், "இனிமேல் உதவ அமெரிக்கா இருக்காது" என்றும், "உங்கள் சொந்த எண்ணெயை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்" என்றும் நாடுகளை வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்