சீனா மீதான அச்சம் : பரிசுப்பொருட்களை குப்பை கூடையில் வீசியெறிந்தார் ட்ரம்ப்
சீனாவிற்கான தனது இரண்டுநாள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று(16) பீஜிங் விமான நிலையத்தில் தனது ஏர்போர்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர், சீன அரசு வழங்கிய நினைவுப் பரிசுகள், சிறப்புப் பிரதிநிதிகளுக்கான அடையாள அட்டைகள், விழா அனுமதி அட்டைகள், மற்றும் தற்காலிகமாகப் பயன்படுத்த வழங்கப்பட்ட கைபேசிகள் என அனைத்தையும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துள்ளனர்.
சீனாவின் உளவு பார்க்கும் தொழில்நுட்பங்கள் மீதான அச்சமே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகளின் தரவுகள் திருடப்படலாம்
சீனாவில் இருந்து பெறப்பட்ட எந்தவொரு பொருளும் ஏர்போர்ஸ் விமானத்திற்குள் அனுமதிக்கப்படாது என்ற கடுமையான விதிமுறையும் இதற்கு காரணம்.
After meeting Xi, Trump’s team dumped all Chinese gifts, badges, pins & burner phones into a giant trash bin before boarding Air Force One.
— سيف الدرعي| Saif alderei (@saif_aldareei) May 15, 2026
No trust at all between the two sides. 🤣 pic.twitter.com/m6sDbaPPMI
சிறிய நினைவுப் பரிசுகள் அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகக் கூட அமெரிக்க அதிகாரிகளின் தரவுகள் திருடப்படலாம் அல்லது அவர்கள் கண்காணிக்கப்படலாம் என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு பீஜிங்கில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரிக்கு வழங்கப்பட்ட தேயிலைப் பெட்டியில் உளவு பார்க்கும் கருவி கண்டறியப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |